17 August 2025
2 Minutes Read

தீவு ரகசியங்கள்: மார்க்கெட் அமைப்பைப் புரிந்துகொள்ள உதவிய ஒரு Pattern 

லட்சத்தீவில் ஒரு குளுமையான காலையில், பல மாதங்களுக்குப் பிறகு, ரோஹித்-தும் அமித்-தும் கடைசியில் சந்தித்துக்கொண்டார்கள். நிதித் திட்ட ஆலோசகர் (chartered financial planner) ஆன ரோஹித், வன்பொருள் தொடக்க இணை நிறுவனர் (hardware startup cofounder) ஆன அமித்-தை நோக்கி நடந்து வரும்போதே கை அசைத்தார். அவர்கள் ஓய்வெடுக்கவே இந்தச் சிறிய விடுமுறைப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அமித் ஏதோ கவலையில் இருப்பதை ரோஹித் உடனே கவனித்தார். அவரது சிரிப்பு, சந்தோஷமாகச் சிரிப்பதுபோல் இல்லாமல், ஏதோ வேண்டுமென்றே சிரிப்பதுபோல் இருந்தது. அப்புறம் அழகான நீலத் தண்ணீரைக் பார்க்காமல் மணலையே பார்த்துக் கொண்டிருந்தார். 

ரோஹித் அவரது தோளில் கை வைத்து, “நீ ரொம்ப சோர்வா இருக்கே, அமித். என்ன நடக்குதுன்னு என்கிட்ட சொல்லு” என்றார். 

அமித் பெருமூச்சு விட்டார். “இந்த விடுமுறை என் மனசை லேசாக்கும்னு நினைச்சேன். ஆனா, என் மனசு திரும்பத் திரும்ப என்னோட முதலீடுகளுக்கே போகுது. நான் என்ன தப்பு பண்றேன்னு தெரியாமலே, பணத்தை இழக்கிறேன். ஒவ்வொரு வர்த்தகமும் சும்மா யூகிப்பது மாதிரியே இருக்கு.” 

ரோஹித் மெதுவா தலையசைத்தார். “நீ மட்டுமில்லை. நிறைய பேரு ஒரு சரியான அமைப்பு இல்லாமல் தான் வர்த்தகம் பண்றாங்க. ஆனா, வர்த்தகர்கள் அடிக்கடி படிச்சு, இன்னும் தெளிவைத் தரக்கூடிய ஒரு Pattern இருக்குன்னு நான் சொன்னா?” 

அமித் புருவத்தைச் சுருக்கினார். “ஏதோ ஒரு தொழில்நுட்ப தந்திரத்தைப் பத்தி மறுபடியும் பேச ஆரம்பிச்சுட்டியா?” 

ரோஹித் சிரித்தார். “தந்திரம் இல்ல, ஒரு சார்ட் வடிவம் தான். அதுக்கு பேரு Three Drive Pattern. இதை நீ இதற்கு முன்னாடி பயன்படுத்தி இருக்க மாட்டாய்.” 

அமித் தலையை அசைத்தார். “கேள்விப்பட்டதே இல்ல.” 

“அருமை,” ரோஹித் சொன்னார். “என் கூட வா. இன்னைக்கு நீ அதைத் தெரிஞ்சுக்குவ.” 

அவர்கள் கடற்கரையோரம் மெதுவாக நடந்தார்கள். ரோஹித் விளக்கினார்: “Three Drive Pattern ஒரு அபூர்வமான, ஆனா ரொம்ப சுவாரசியமான சார்ட் வடிவம். மார்க்கெட்-டில் இது மூன்று வலிமையான அலைகள் மாதிரி நெனச்சுக்கோ. முதல் drive மேல போகும், அப்புறம் pullback வரும். இரண்டாவது drive மேல போகும், அப்புறம் இன்னொரு pullback வரும். மூன்றாவது drive மேல போகும், அப்புறம் ஒரு பெரிய நகர்வு வரும். இது இறங்குமுகப் போக்குகளிலும் அதே மாதிரிதான் வேலை செய்யும்.” 

அமித் தனக்கு முன்னால் இருந்த அலைகளைப் பார்த்தார். “அப்போ மார்க்கெட் இந்தப் கடலைப் போல, படிப்படியாகப் பலம் சேர்க்குதா.” 

“சரியா சொன்னாய்,” ரோஹித் சொன்னார். “மூணாவது drive முடிஞ்சப்போ, நீ ஒரு reversal-லையோ இல்லன்னா continuation-னையோ பார்க்கலாம். இதுல நீ வேகமா உள்ள குதிக்கக் கூடாது. நீ wait பண்ணனும். அந்த drives எப்படி உருவாகுதுன்னு பார்க்கணும். volumes அதுக்கு ஒத்துப்போகுதான்னு உறுதிப்படுத்தணும். அப்புறம்தான் நீ முடிவு எடுக்கணும்.” 

அமித் மெதுவா தலையசைத்தார். “நான் எப்பவும் அவசரப்படுவேன். ஒருவேளை அதனாலதான் எதுவும் பலன் கொடுக்கல.” 

ரோஹித் சிரித்தார். “இந்த வடிவம் உன்னை பொறுமையா இருக்கச் சொல்லும். முன்கூட்டியே நீ உள்ளே நுழைய முடியாது. நீ கண்டிப்பா மூன்றாவது drive வர வரைக்கும் wait பண்ணனும். அந்த கட்டுப்பாடு மட்டும் இருந்தாலே, ஒருத்தர் வர்த்தகம் பண்ற விதமே மாறும்.” 

pattern

அவர்கள் ஒரு பனைக்குடிலுக்குக் கீழே அமர்ந்தார்கள். ரோஹித் தன்னுடைய Tablet-டை திறந்தார். 

அவர் அமித்-ட்க்கு ஒரு முந்தைய stock chart-டைக் காட்டினார். “இதுதான் முதல் drive. stock ஒரு pullback ஆகுது. இதுதான் இரண்டாவது drive. இன்னொரு pullback. அப்புறம் இந்த மூன்றாவது drive-அ பார்? இந்தப் புள்ளிக்கு அப்புறம், rally குறிப்பிடத்தக்க அளவு பலப்பட்டது. ஒருத்தர் முன்கூட்டியே் கணிப்பதற்கு பதிலா, இந்த மூணு drives வர வரைக்கும் wait பண்ணி ருந்தா, அவங்க entry இன்னும் முறையாக இருக்கும்.” 

அமித் ஆச்சரியமா பார்த்தார். “இது இப்போ ரொம்பத் தெளிவாக இருக்கு. stock மலிவாக இருக்குன்னு நெனச்சு நான் எப்பவுமே corrections-க்கு நடுவுல தான் உள்ளே நுழைவேன். ஆனா மார்க்கெட்-ட்கு இப்படி ஒரு  ரிதம் இருக்குன்னு எனக்கு தெரியவே தெரியாது.” 

“அதுதான் இதோட அழகு,” ரோஹித் சொன்னார். “நீ இந்த pattern-அ கத்துக்கிட்டப்போ, தேவையில்லாத சத்தத்தைப் பார்க்காம, அதன் அமைப்பைப் பார்க்க ஆரம்பிப்பாய்.” 

அமித் காலைல இருந்து முதல் முறையா சிரிச்சார். “இந்தப் பயணம் ரொம்பப் பயனுள்ளதா போகுது.” 

pattern

சூரியன் மறைய ஆரம்பித்தபோது, அவர்கள் குடிசைகள் பக்கமா திரும்பி நடந்தார்கள். அமித் மெதுவா சொன்னார், “ரோஹித், உனக்கு ரொம்ப நன்றி. நான் இங்க சோர்வாகவும் குழப்பத்தோடும் வந்தேன். ஆனா இப்போ எனக்கு ஒரு நிலையான விஷயம் புரிஞ்ச மாதிரி இருக்கு. நான் மூணு drives-களுக்காகவும் wait பண்ணுவேன். இனி நான் சும்மா முடிவுகள் எடுக்க மாட்டேன்.” 

ரோஹித் தலையசைத்தார். “நல்லது. அப்புறம் நீ charts செக் பண்ணும்போது இல்லன்னா setups ட்ராக் பண்ணும்போது, எல்லாத்தையும் ஒழுங்காக வச்சுக்கிற மாதிரி ஒரு சிம்பிளான App-அ யூஸ் பண்ணு. NaviaAllInOneApp மாதிரி Apps எனக்கு முறையாக இருக்க உதவிகரமாக இருக்குது.” 

அமித் அமைதியான தண்ணீரைக் கூர்ந்து பார்த்தார். “இந்த நாள் ஒரு டஜன் webinars-களை விட அதிகமா எனக்குக் கத்துக் கொடுத்துடுச்சு. கடைசியா எனக்கு இன்னும் confident-ஆ இருக்கு.” 

அப்புறம் அந்தத் தீவின் மாலை வேளையின் அமைதியில, மார்க்கெட் எப்பவும் வெறித்தனமாக நகரும். ஆனா சரியான pattern-உம் ஒரு அமைதியான மனசும் இருந்தா, தன்னால ஒரு நோக்கத்துடன் நகர்ந்து செல்ல முடியும்னு அமித் புரிஞ்சுக்கிட்டாரு. 

Do You Find This Interesting?

We’d Love to Hear from you

yes or no feedback form

DISCLAIMER: This story is a fictional illustration created for educational purposes. Investment in securities market are subject to market risks, read all the related documents carefully before investing. The securities quoted are exemplary and are not recommendatory. Brokerage will not exceed the SEBI prescribed limit. Full disclaimer: https://bit.ly/naviadisclaimer