14 December 2025
1 Minute Read

மறைக்கப்பட்ட உருவாக்கம்: பல வர்த்தகர்கள் கவனிக்கத் தவறும் ஒரு Pattern

பிவாண்டி (Bhiwandi) தொழில்பேட்டை எப்பவும் போல டிரக்குகள் மற்றும் லோடர்களோட சத்தத்துல பரபரப்பா இருந்தது. அங்க இருக்குற ஒரு பெரிய குடோன்ல (warehouse), எல்லா அட்டைப்பெட்டிகளும் வரிசையா அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனா ஒரு பக்கம் மட்டும் எல்லாம் கலைஞ்சு போயிருந்தது.

குடோன் மேலாளர் இம்ரான் ரொம்ப டென்ஷனா இருந்தாரு. “இதெல்லாம் எப்படி இப்படி ஆச்சு? இந்த பெட்டிகள் ஒரு திசையில நகர வேண்டியது, ஆனா இங்க வந்து இப்படி ஏன் குவியுது?”

அவருக்கு எதிரே பூஜா நின்னுட்டு இருந்தாங்க. அவங்க ஒரு சப்ளை செயின் அனலிஸ்ட் (supply chain analyst). பக்கத்துல ஒரு பெட்டி மேல ஹர்ஷ் உட்கார்ந்திருந்தாரு. ஹர்ஷ் ஒரு ஃப்ரீலான்ஸ் டிரேடர் (Freelance Trader), இம்ரானை அப்பப்போ வந்து பார்ப்பாரு.

பூஜா அந்த இடத்தைக் கவனிச்சுட்டு சொன்னாங்க, “இந்தக் குவியல் ஒரு கதையைச் சொல்லுது.”

இம்ரான் குழப்பமா, “கதையா?” அப்படின்னு கேட்டாரு.

ஹர்ஷ் சிரிச்சுகிட்டே சொன்னாரு, “எல்லாமே ஒரு கதையைச் சொல்லும் இம்ரான். சார்ட்ஸ் (charts) கூடத்தான்.”

இம்ரான் சலிச்சுக்கிட்டாரு. “மறுபடியுமா?”

பூஜா ஹர்ஷ் பக்கம் திரும்பி, “என்ன மாதிரியான கதை?”ன்னு கேட்டாங்க.

அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளைக் காட்டி ஹர்ஷ் சொன்னாரு, “இது மார்க்கெட் ஒரு பெரிய மூவ்மென்ட்க்குத் தயாராகுற மாதிரி இருக்கு. பார்க்கக் கொஞ்சம் குழப்பமா இருந்தாலும், உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு பில்ட்-அப் (build-up) ஆகுது.”

இம்ரான் பெருமூச்சு விட்டாரு. “அது நகர ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எனக்குப் புரிஞ்சா நல்லா இருக்குமே.”

ஹர்ஷ் தலையசைச்சாரு. “இந்த நிலையைப் பிரதிபலிக்க ஒரு பேட்டர்ன் இருக்கு. அதுக்கு பேருதான் Volatility Contraction Pattern (VCP).”

அவங்க குடோனோட ஒரு அமைதியான மூலைக்குப் போனாங்க. ஹர்ஷ் பேச ஆரம்பிச்சாரு.

“VCP அப்படிங்கிறது இண்டிகேட்டர்ஸ் (indicators) பத்தினது இல்ல. இது விலை எப்படி நடந்துக்குது (price behavior) அப்படிங்கிறதைப் பத்தினது. ஒரு பிரேக்-அவுட் (breakout) வர்றதுக்கு முன்னாடி ஏற்ற இறக்கங்கள் எப்படி சுருங்குதுன்னு இது காட்டும்.”

பூஜா ஆர்வமா, “விளக்கமா சொல்லுங்க”ன்னு கேட்டாங்க.

“விலை மேல போகுதுன்னு வச்சுப்போம், அப்புறம் கொஞ்சம் குறையுது (pullback). மறுபடியும் மேல போகுது, ஆனா இந்த முறை குறையுற அளவு முன்னாடி இருந்ததை விடக் குறைவா இருக்கு. இப்படி ஒவ்வொரு முறையும் அந்த ரேஞ்ச் (range) சுருங்கிட்டே வரும்.”

அவரு ஒரு அட்டைப்பெட்டி மேல வரைஞ்சு காட்டினாரு.

“முதல்ல 10% குறையுதுன்னு வச்சுப்போம், அடுத்த முறை 6%, அப்புறம் 3%. இப்படி விலை சுருங்குறதுக்குக் காரணம் விக்கிறவங்க (sellers) பலவீனம் ஆகுறாங்கன்றதுனால

இம்ரான் மெதுவா புரிஞ்சுக்கிட்டாரு. “ஒவ்வொரு முறையும் தப்பா அடுக்கி வைக்கப்படுற பெட்டிகளோட எண்ணிக்கை குறையுற மாதிரி.”

“சரியாக (spelling mistake) சொன்னீங்க! அதே சமயம் (வர்த்தக அளவும் (Volume) குறையும்). அப்படின்னா அங்க விக்கிறவங்க ரொம்ப குறைவா இருக்காங்கன்னு அர்த்தம். சப்ளை குறைய ஆரம்பிக்குது.”

பூஜா சொன்னாங்க, “அப்போ அங்க அழுத்தம் (pressure) உருவாகுது.”

“ஆமாம். எப்போ டிமாண்ட் (demand) உள்ள வருதோ, அப்போ விலை ரொம்ப வேகமா பிரேக்-அவுட் ஆகி மேல போகும்.”

இம்ரான் கேட்டாரு, “ஆனா இதை எப்படித் தெளிவா கண்டுபிடிக்கிறது?”

ஹர்ஷ் சில வழிகளைச் சொன்னாரு:

Uptrend: அந்த ஸ்டாக் ஏற்கனவே ஏறுமுகத்துல (uptrend) இருக்கணும். இது ஒரு தொடர்ச்சிyaana பேட்டர்ன் (continuation pattern).

Contractions: ரெண்டுல இருந்து நாலு முறை விலை சுருக்கம் இருக்கணும். ஒவ்வொரு சரிவும் முன்னாடி இருந்ததை விடச் சின்னதா இருக்கணும்.

Volume: சரிவுகள் நடக்கும்போது வால்யூம் குறையணும். இது விற்பனை அழுத்தம் குறைவதைக் காட்டும்.

Breakout: பிரேக்-அவுட் ஆகும்போது அதிகப்படியான வால்யூம் இருக்கணும்.

பூஜா சிரிச்சாங்க, “இது புயலுக்கு முன்னாடி இருக்குற அமைதி மாதிரி இருக்கு.”

ஹர்ஷ் ஒரு டெக்னிக்கல் பாயிண்ட்டைச் சொன்னாரு. “சில டிரேடர்ஸ் இதை ATR (Average True Range) வச்சும் அளவிடுவாங்க. ATR குறைஞ்சிட்டே வந்தா, அந்த ஸ்டாக் சுருங்க ஆரம்பிக்குதுன்னு உறுதிப்படுத்திக்கலாம்.”

“எப்போ என்ட்ரி (entry) எடுக்கலாம்?”னு இம்ரான் கேட்டாரு.

“விலை அந்த கன்சாலிடேஷன் (consolidation) ஜோனை தாண்டி மேல போகும்போது என்ட்ரி எடுக்கலாம். ரிஸ்க்கை லேட்டஸ்ட் லெவலுக்கு கீழ வச்சு மேனேஜ் பண்ணலாம்.”

அப்போ குடோன் வேலையாட்கள் வந்து லோடிங் பிரச்சனை சரியாயிடுச்சுன்னு சொன்னாங்க. கலைஞ்சு கிடந்த பெட்டிகள் இப்போ வரிசையா நகர ஆரம்பிச்சது.

இம்ரான் நிம்மதியா சொன்னாரு, “நீ சொன்னது இதுதான். முதல்ல ஒரு குழப்பம், அப்புறம் ஒரு டைட்னஸ் (tightening), இப்போ எல்லாம் ஸ்மூத்தா போகுது.”

ஹர்ஷ் சிரிச்சாரு. “மார்க்கெட்டும் இப்படித்தான் செயல்படும்.”

பூஜா சொன்னாங்க, “இந்த பேட்டர்ன் ரொம்ப பிராக்டிகலா இருக்கு. சிக்கலா இல்லாம, அதே சமயம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு.”

“அதனாலதான் நிறைய டிரேடர்ஸ் இதை விரும்புறாங்க. இது ஸ்டாக்ஸ், இண்டெக்ஸ், கமாடிட்டி என எல்லாத்துலயும் பயனுள்ளதாக இருக்கும்.”

இம்ரான் சிரிச்சுகிட்டே , “இன்னைக்கு ஒரு பயனுள்ள விஷயத்தைக் கத்துக்கிட்டேன்.” – ன்னு சொன்னாரு

ஹர்ஷ் கடைசியா ஒன்னு சொன்னாரு, “இந்த மாதிரி பேட்டர்ன்களைப் படிக்கும்போது chart- ஐ ரொம்ப கிளீனா வச்சுக்கோங்க. விலை மற்றும் வால்யூம்ல மட்டும் கவனம் செலுத்துங்க. Navia All In One App போன்ற தளங்கள் இதைத் தெளிவா கண்காணிக்க உங்களுக்கு உதவும்.”

டிரக்குகள் குடோனை விட்டு வரிசையா கிளம்பினப்போ, இம்ரான் மனசு ரொம்ப அமைதியா இருந்தது. அந்த குழப்பத்துக்கு ஒரு அர்த்தம் இருந்தது, அந்த பேட்டர்னுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அடுத்த பெரிய மூவ்மென்ட்க்கு முன்னாடி அதை எப்போ பிடிக்கணும்னு இப்போ அவருக்குத் தெரியும்.

Do You Find This Interesting?

We’d Love to Hear from you

yes or no feedback form

DISCLAIMER: This story is a fictional illustration created for educational purposes. Investment in securities market are subject to market risks, read all the related documents carefully before investing. The securities quoted are exemplary and are not recommendatory. Brokerage will not exceed the SEBI prescribed limit. Full disclaimer: https://bit.ly/naviadisclaimer